இந்த வார இறுதியில் குறித்த பிரதேசத்தை தாக்கலாம் என்று எதிர்பார்க்க்படும் மகாசென் புயலிலிருந்து தப்புவதற்காகவே சுமார் 200 பேரை ஏற்றிய இந்தப் படகு அங்கிருந்து புறப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
ரோஹிஞ்சா முஸ்லிம்கள் பெருவாரியாக வாழ்ந்த ராக்கைன் மாநிலத்தின் போக்டோவ் நகரிலிருந்து புறப்பட்ட இந்தப்படகிலிருந்த பெரும் எண்ணிக்கையானோர் காணாமல்போயுள்ளனர்.
கடந்த ஆண்டு ராக்கைன் பிராந்தியத்தில் மூண்ட வன்முறைகளைத் தொடர்ந்து பல்லாயிரக் கணக்கான ரோஹிஞ்சா முஸ்லிம்கள் தற்காலிக முகாம்களில் வாழ்ந்துவருகின்றனர்.
மகாசென் புயலை முன்னிட்டு எச்சரிக்கை விடுத்திருந்த ஐநா அந்தப் பிரதேசத்திலிருந்து மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தது.
பல இடங்களில் இடம்பெயர்ந்த மக்கள் தாழ்நில கரையோரப் பகுதிகளில் வாழ்ந்துவருவதால் அவர்கள் பெரும் வெள்ளப்பெருக்கை எதிர்கொள்ள நேரிடுமென்றும் ஐநா கூறியிருந்தது.
புயல் தாக்கத்திலிருந்து தப்பிச்செல்ல முயன்று கடலில் காணாமல்போயுள்ளவர்களைத் தேடும் பணிகள் நடந்துவருவதாக அந்தப் பிராந்தியத்தில் உள்ள ஐநாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான அதிகாரி தெரிவித்தார்.
முகாம் அதிகாரிகளின் அனுமதிபெற்றே இந்தப் படகு புறப்பட்டிருந்ததாகவும் பாறையொன்றில் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் தெரியவருகிறது.
இதுவரை ஒரு சிலர் உயிர் தப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
(பிபிசி)
No comments:
Post a Comment