மேற்கு பர்மாவிலிருந்து ரோஹிஞ்சா முஸ்லிம்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த படகொன்று கடலில் மூழ்கியுள்ளது. இந்த வார இறுதியில் குறித்த பிரதேசத்தை தாக்கலாம் என்று எதிர்பார்க்க்படும் மகாசென் புயலிலிருந்து தப்புவதற்காகவே சுமார் 200 பேரை ஏற்றிய இந்தப் படகு அங்கிருந்து புறப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.